000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a தட்சிணாமூர்த்தி |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a தென்முகக் கடவுள் மறையோதிய நிலையில் அமர்வு |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a கழுகுமலை வெட்டுவான் கோயிலில் உள்ள பூதவரியில் அமைந்த சிறு கோட்டத்தில் தென்முகக் கடவுள் அமர்ந்துள்ளார். வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டு சுகாசனத்தில், உடலை முன்னோக்கி தள்ளியவாறு, புன்னகை தவழும் முகத்துடன் ஆலமர் செல்வர் உள்ளார். பின்னிரு கைகளில் வலது கையில் மானையும், இடது கையில் அக்கமாலையையும் கொண்டுள்ளார். வலது முன் கை சிதைந்துள்ளது. இன்ன முத்திரையென்று அறியக்கூடவில்லை. இடது கையை சற்று முன் வளைத்து, இடது தொடை மீது ஊன்றியுள்ளார். ஜடாபந்தம் தலையலங்காரமாய் உள்ளது. வலது காதில் பத்ரகுண்டலம், இடது காது அணியின்றி நீள்காதாய் அமைந்துள்ளது. தோள்களில் வாகுமாலையும், கைகளில் நாகாபரணம் போன்ற தோள்வளையும், முன் கைகளில் இரு வளைகளும், கழுத்தில் மணிகள் அமைந்த பதக்கத்துடன் கூடிய அணியும் விளங்குகின்றன. மார்பில் உத்தரீயம் இடது தோளில் மடிப்பாக போடப்பட்டுள்ளது. அரையாடை அணிந்துள்ள இறைவனின் இடைக்கட்டின் முடிச்சு வலது பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது. இறைவனின் அமர்வை நோக்குகையில் எதிரே உள்ள ஒருவரிடம் பேசும் பாணியில் உள்ளதைப் போன்று அமைந்துள்ளது. இக்கலைப்பாணி பாண்டிய நாட்டுக்கே உரியதாக தோன்றுகிறது. |
653 | : | _ _ |a தட்சிணாமூர்த்தி, தென்முகக் கடவுள், ஆலமர் செல்வன், வேத நாயகன், மறையோதி, பாண்டியர் குடைவரை, கழுகு மலை, கழுகு மலை வெட்டுவான் கோயில், முற்காலப் பாண்டியர் கலைப்பாணி, பாண்டியர் ஒற்றைத் தளி, பாண்டியர் கலைகள், பாண்டிய நாடு, பாண்டியர், பாண்டிய மண்டலம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கழுகு மலை |d தூத்துக்குடி |f கோவில்பட்டி |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 9.15296112 |
915 | : | _ _ |a 77.70432074 |
995 | : | _ _ |a TVA_SCL_000224 |
barcode | : | TVA_SCL_000224 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |